Monday, May 2, 2016

ISSUE-2 - MAY-2016


ஆசிரியர் ரவிகொண்டாவின் எண்ணங்கள் உங்களோடு பகிர -
"ஸௌராஷ்டிரா பத்ரிகே" யின் இரண்டாவது இதழ் இதுஇந்தப் பத்திரிக்கையின் முதல் இதழானது நான் நினைத்ததைவிட மிக விமர்சையாகவே வெளியானது. இதற்கு ஸௌராஷி அகாடமியின் தலைவர் திரு.சந்திரசேகரன் அவர்களும் ஸௌராஷ்ட்ர மத்திய சபையின் பொதுச் செயலாளர் திரு.R.B.R.ராமசுப்ரமணியன் அவர்களும் கொடுத்த ஆதரவே காரணம்.  இதற்காக என் மனமார்ந்த நன்றியினை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
முதல் இதழானது உலகத் தாய் மொழி தினமான 21-2-2016 அன்று, ஸௌராஷ்ட்ர மத்திய சபையின் தலைவர். திரு.T.D.ஈஸ்வர மூர்த்தியின் கரங்களால், திரு.R.B.R.ராமசுப்ரமணியன், ஸௌராஷ்ட்ர மத்திய சபை பொதுச் செயலாளர், திரு. P.G.M.துளசிராம், தலைவர் நாகல் நகர் ஸௌராஷ்ட்ர சபை மற்றும் துணை மேயர்.திண்டுக்கல் மாநகராட்சிதிரு.E.சாந்தாராம், மேனாள் தலைவர். ஸௌராஷ்ட்ர மத்திய சபை, திரு..கி.சந்திரசேகரன், தலைவர்.ஸௌராஷி அகடமி, திரு. A.K.R.சுப்ரமணியன், மேனாள் செயலர், ஸௌராஷ்ட்ர மத்திய சபை, ஸௌராஷ்ட்ர மத்திய சபையின் மற்றும் பல அலுவலர்கள், ஸௌராஷ்டிரா மொழி வல்லுனர்கள், மற்றும் ஏராளமான நம் ஸௌராஷ்டிர மக்கள் முன்னிலையில், வெளியிடப்பட்டது. என்னை ஆதரித்த எல்லோருக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம் ஸௌராஷ்டிரா சமூகத்தில் உள்ள முக்கியப் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அதைப்பற்றி எழுதி, மக்களின் விழிப்புணர்வை எழுப்ப வேண்டும் என்பதே என் எண்ணம்அதன்படி ஒரு பிரச்சனையை எடுத்து முதல் இதழில் எழுதி இருந்தேன்.  "நம் மொழிக்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்து, நம் மொழியை இந்திய அரசியல் சாசனம் 8ஆம் பிரிவில் சேர்க்க வேண்டும் " என்பதே அந்தச் செய்தி.   இந்தச் செய்தி நம் மக்கள் பலரின் மனதில் பதிந்து, ஒரு பெரும் புரட்சியைக் கிளப்பி உள்ளது நல்ல விஷயம்
இதன் பிறகு, KUSO தலைவர்.திரு. K.V.பதிதா அவர்கள், இது பற்றி முகநூலில் "ஆன் லைன் பெடிஷன்" உருவாக்கி, இதுவரை சுமார் 1000 பேர் ஆதரவு பெற்று இருக்கின்றது.
இது தொடர்பாக சமீபத்தில் "தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் ஒரு கருத்தரங்கு KUSO வால் நடத்தப்பட்டதுதனலட்சுமி பொறியியல் கல்லூரியின், தலைவர் திரு.V.P.ராமமூர்த்தி அவர்களே இதற்கு தலைமை தாங்கினார். திரு.ஸ்ரீ ராம் சேகர், உபதலைவர், ஸௌராஷ்ட்ர மத்திய சபை- மற்றும் மூத்த வழக்கறிஞர், இதில் கலந்துகொண்டு பல நல்ல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு பெற்று, நாம் மத்திய அரசை அணுகுவோம் என்று நம்புகின்றேன்.

இதைத்தவிர நம் மொழி, இலக்கியத்தில் முன்னேர வேண்டும், அதற்கான ஒரு மேடையை என் பத்திரிகை உருவாக்கும் என்று எழுதி இருந்தேன்.  அதன்படியே பல ஸௌராஷ்டிர எழுத்தாளர்கள் தங்கள் கவிதைகள் மற்றும் படைப்புக்களை எழுதி எனக்கு அனுப்பி உள்ளனர். அதை இந்த இதழிலிருந்து இந்தப் பத்திரிக்கையில் பிரசுரிக்கத் தொடங்கி உள்ளோம். இவை எல்லாம் இணைய தளத்தில் அழியாப் படைப்புகளாக இருக்கும், இதை ஆயிரக்கணக்கான நம் மக்கள் படித்து பயனுருவர்கள் என்பதில் சந்தேகமில்லை.


श्री कीष्णु महिमो - श्री कीष्णु ज॑ननम्
ஸ்ரீ.கீஷ்டு மஹிமொ  ஸ்ரீ.கீஷ்ணு ஜெனனம்
वसुदेवु-देवकि स्रेष्टुक हा॑दासि
वसुदेवु कृपोहाल् न्हुरुन् आट॑ उजासि
कासु हन्नौव् र्हीकिन् त॑नु अनुबविञ्चन् मुस॑निना
मोसु क॑त्तिया॑ कंसुडु,
त॑ङ्गव् ज॑य्लुम् तविकिनिना ॥   ।१।
வசுதே3வு-தே3வகி ஸ்ரேஷ்டுகன் ஹொதா3சி,
வசுதே3வு கிருபைஹால் ந்ஹுருன் ஆடெ உஜாஸி,
காஸு ஹன்னவ் ர்ஹீகின் தெனு அனுபவிஞ்சன் முஸெனினா,
மோஸு கெத்தியோ கம்ஸுடு,
தெங்கொ3 ஜெய்லும் தவிகினினா,
हा॑राडुवेळु ज्यासि आ॑रादुम् सा॑म्पुकन्
राडु कम्सुडु सारथि क॑र॑सि भ॑ळि विवर्कन्
दुष्टु कम्सुडुक् ऐगयस् ओण्ट॑ वाणि अकास् र्ही
तेटु त॑ना॑ उञ्चखाल् सिय॑सि भ॑दिरिजी ॥ ।२।
ஹொராடு3வெளு ஜ்யாஸி ஒராது3ம் ஸொம்புகன்,
ராடு3 கம்ஸுடு3 ஸாரதி2 கெரெஸி ப்3ஹெளி விவர்கன்,
து3ஷ்டு கம்ஸுடு3க் ஐக3யஸி ஒண்டெ வாணி ஆகாஸ் ர்ஹீ,
தேடு தெனா உஞ்சக்ஹால் ஸியெஸி ப்4ஹெதிரிஜி.  
"अरे अत्याचारि !   देवकिव् उज्वन् अट्व न्हुरु
अरे तोर भ॑यिनु पिल्लो ता॑र एमुडु होय्"
खळ्ळ॑स् लम्बुचुरि मदुरा राडु, फिर॑स्भ॑यिनुक् मरन् ,
ध॑रासि वसुदेवु कम्सुडुक्, हात् अड्डम् दीकिन् ॥ ।३। 
"அரெ அத்யாசாரி" ! தே3வகிவ் உஜ்வன் அட்வ ந்ஹுரு,
அரே தோர் பெ4ஹெய்னு பில்லோ தொரெ யமுடு ஹோயி,
கள்ளேஸ் லம்புசுரி மதுரா ராடு, ப்ஹிரெஸ் பெ4ஹெய்னுக் மரன்,
தெ4ராஸி வஸுதே3வு கம்ஸுடு3க், ஹாத் அட்3ட3ம் தீ3கின்,
"मर्ग्यात् भा॑र॑ सळानु !   तुङ्ग पज॑ सेस्त॑
दुर्भाग्युडु अम् र॑ अट्व पिल्लोस्ना?
गोय्सेत्ते गुणवति देवकिक् मरन् काय् न्याव्दीडुवेस् तुजोळ् मा॑न्नु  घ॑ट्टि क॑र्लि
अट्व न्हुरुक् सम्सय् क॑रङ्गो" ॥  ।४।
மர்க்யாத் பொ4ரெ ஸளானு ! துங்க பஜெ ஸேஸ்தெ
து3ர்ப்ஹா4க்3யுடு அம்ரெ அட்வ பில்லோஸ்னா ?
கோ3ய்ஸேஸ்தே கு3ணவதி தே3வகிக் மரன் காய் ந்யாவ் ?
தீ3டுவேஸ் துஜோள் மொன்னு க்ஹெ4ட்டி கெர்லி
அட்வன்ஹுருக் ஸம்ஸய் கெரெங்கோ3.